உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெள்ள தடுப்பு பணிகள் 30க்குள் முடிக்க அறிவுறுத்தல்

வெள்ள தடுப்பு பணிகள் 30க்குள் முடிக்க அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் போது பலத்த சேதமடைந்தது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஆரணி மற்றும் கொற்றலை ஆற்று கரையோர பகுதிகளில் வெள்ளம் புகுந்து கரையோர கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஆற்று வெள்ளம் புகுந்தது.திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக, தமிழக அரசு, 350 கோடி ரூபாய் ஒதுக்கியது. நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் சார்பில், வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொன்னேரி அடுத்த தத்தைமஞ்சி கிராமத்தில், 20 கோடி ரூபாய் செலவில் ஆரணி ஆற்று கரையோரம் வெள்ள தடுப்புச்சுவர் மற்றும் கரையை பலப்படுத்தும் பணிகளை நீர்வளத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பணிகளை, கலெக்டர் பிரபுசங்கர் நேற்று ஆய்வு செய்தார். பொன்னேரி சப் - -கலெக்டர் வாஹே சங்கேத் பல்வந்த், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் உடனிருந்தனர்.இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், 350 கோடி ரூபாய் செலவில் அறிவியல் பூர்வமாக வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன.இம்மாதம், 30ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என அறிவுறுத்தி உள்ளேன். வரும் பருவ மழையின் போது மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ