உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளியில் துாய்மை பணி தீவிரம்

அரசு பள்ளியில் துாய்மை பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ளது. ஊத்துக்கோட்டை, தொம்பரம்பேடு, தாராட்சி, கச்சூர், பெரிஞ்சேரி, சீத்தஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரும், 10ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள் அனைத்தும் சீரமைக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் தீவிர துப்புரவு பணி துவங்கியது.பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள், 10க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி வளாகம், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைக்கு கருப்பு வர்ணம் பூசப்பட்டது. குடிநீர் குழாய்களும் சீரமைக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்