உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி கலைமகள் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

கும்மிடி கலைமகள் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ கலை மகள் வித்யாமந்திர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், இம்மாதம், 21ம் தேதி, சர்வ தேச யோகா தின விழா கொண்டப்பட்டது. பள்ளியின் நிறுவன தலைவர் திருஞானம் தலைமையில் நடந்த விழாவில், தாளாளர் தேன்மொழி முன்னிலை வகித்தார். சவீதா மருத்துவ கல்லுாரி பேராசிரியரும் பள்ளியின் செயலருமான டாக்டர் ஞானதீபன்சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.நிகழ்வின் போது, பள்ளி மாணவர்கள், 400 பேர் ஒரே நேரத்தில்,30 நிமிடங்கள் யோகாசனம்செய்தனர். பின் மாணவர்களின் யோகாசனசிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், யோகாவில் உலக சாதனைமற்றும் சர்வதேச யோக போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பள்ளி மாணவ, மாணவியர், 15 பேருக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை