உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டியிடம் அத்துமீறல் மேலும் இருவரிடம் விசாரணை

மூதாட்டியிடம் அத்துமீறல் மேலும் இருவரிடம் விசாரணை

தேனாம்பேட்டை: பாண்டிபஜார், ஆர்.கே.புரம் அம்மன் கோவில் அருகிலுள்ள நடைபாதையில் வசிக்கும், 85 வயது மூதாட்டியிடம், கடந்த 4ம் தேதி இரவு, மர்ம நபர் ஒருவர் போதையில் அத்துமீறலில் ஈடுபட்டார்.மூதாட்டி கத்தி கூச்சலிட, ஆத்திரமடைந்த போதை நபர் மூதாட்டியை தாக்கிவிட்டு தப்பினார்.கடந்த இரு நாட்களுக்கு முன், இரவில் அங்கு வந்து நோட்டமிட்ட இருவரை மூதாட்டி அடையாளம் கண்டு, அங்கிருந்தோர் உதவியுடன் பிடித்து, பாண்டி பஜார் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜம், 31, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரமேஷ்,25, என தெரிந்தது.பின் இந்த வழக்கு, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, இருவரையும் கைது செய்தனர்.இவர்கள் இருவரும், அரசியல் பிரமுகர் ஒருவர் நடத்தும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர்.மேலும், இரவு நேரத்தில் நடைபாதையில் உறங்கும் பெண்கள், மூதாட்டியை நோட்டமிட்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது.ரமேஷுடன் வேலை பார்க்கும் மேலும் இருவருக்கும், இதில் தொடர்புள்ளது தெரிந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று அந்த இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை