உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், நாளை ஜமாபந்தி துவங்குகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நாளை முதல் துவங்குகிறது. கிராம கணக்குகளை தணிக்கை செய்ய, வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பொதுமக்கள் முன்னதாகவே, தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். வருவாய் தீர்வாயத்திற்கு முன்னர் பெறப்பட்ட மனுக்கள் மீது வருவாய் தீர்வாய மனு என, குறிப்பிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.மேலும், கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதை மேற்கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வட்டம் வருவாய் தீர்வாய அலுவலர்கள் நாட்கள்

கும்மிடிப்பூண்டி கலெக்டர் ஜூன் 7, 11-14, 18-19ஆவடி டி.ஆர்.ஓ., ஜூன் 7, 11-14பொன்னேரி சப் - கலெக்டர் ஜூன் 7, 11-14, 18-21, 25-28திருவள்ளூர் - ஆர்.டி.ஓ., ஜூன் 7, 11-14, 18-21, 25-27திருத்தணி ஆர்.டி.ஓ., ஜூன் 7, 11-14, 18-21பூந்தமல்லி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜூன் 7, 11-14, 18ஊத்துக்கோட்டை உதவி ஆணையர், கலால் ஜூன் 7, 11-14, 18-19பள்ளிப்பட்டு தனி துணை கலெக்டர் ஜூன் 7, 11-13ஆர்.கே.பேட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் - நிலம் ஜூன் 7, 11-14


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி