உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமண வீட்டில் நகை ‛திருட்டு உறவுக்கார பெண்ணுக்கு ‛வலை 

திருமண வீட்டில் நகை ‛திருட்டு உறவுக்கார பெண்ணுக்கு ‛வலை 

புழல்:சென்னை புழல், அம்பத்துார் நெடுஞ்சாலை, தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுகுமார், 60; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி உமாமகேஸ்வரி, 53. இவர்களது மகன் சீனிவாசனுக்கு, கடந்த மாதம் திருமணம் நடந்தது.திருமண வேலைகளை கவனிக்க உதவியாக உமாமகேஸ்வரி, சூலுார்பேட்டையைச் சேர்ந்த உறவுக்கார பெண் அக் ஷயா என்பவரை அழைத்து வந்திருந்தார்.அவரிடம் திருமணத்திற்கான நகை, புத்தாடை மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருந்தார். தன் மொபைல் போனின் பண பரிவர்த்தனைக்கான ரகசிய குறியீட்டு எண்ணையும் நம்பிக்கையோடு கொடுத்திருந்தார் இதை பயன்படுத்தி அக் ஷயா, திருமணம் முடியும் வரை, 28 சவரன் நகை, 4 லட்சம் ரூபாயை சிறிது சிறிதாக திருடியுள்ளார்.உமாமகேஸ்வரி குடும்பத்தினர், திருமணத்திற்கான செலவுகளை சரிபார்த்த போது, மேற்கண்ட அளவிற்கு நகை, பணம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து புகாரில் புழல் போலீசார், அக் ஷயாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி