உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீணாகும் கொத்தகுப்பம் கிராம சேவை கட்டடம்

வீணாகும் கொத்தகுப்பம் கிராம சேவை கட்டடம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கொத்தகுப்பம் ஊராட்சியில், கோணசமுத்திரம் சாலையை ஒட்டி, சாமுண்டீஸ்வரியம்மன் கோவில் எதிரே, கிராம சேவை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம், இதுவரை ஊராட்சியின் பயன்பாட்டிற்கு வரவில்லை. நாடோடிகள் மற்றும் புலம் பெயர்ந்து வரும் கரும்பு வெட்டு தொழிலாளர்கள் தங்கும் இடமாக மட்டுமே பயன்பட்டு வருகிறது. ஊராட்சியின் பொது பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த கட்டடம், பலரது பயன்பாட்டில் இருந்து வருவதால், உருக்குலைந்து பொலிவிழந்து கிடக்கிறது. தற்போது இதில், யாரும் குடியிருக்காத நிலையில், மீண்டும் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு முன்னதாக, சேதம் அடைந்துள்ள தரைப்பகுதியை சீரமைக்கவும், கட்டட வளாகத்திற்கு பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ