| ADDED : ஜூலை 12, 2024 01:54 AM
பொன்னேரி:பகுஜன் சமாஜ் கட்சியின், மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த, 5ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று பொன்னேரி அனைத்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில், மேற்கண்ட கொலை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகே நடந்தது.இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்று கொலை சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பி, கண்டன உரயைாற்றினர். மேற்கண்ட கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும், வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.