உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நுாலக கட்டட பணி திருத்தணியில் விறுவிறு

நுாலக கட்டட பணி திருத்தணியில் விறுவிறு

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில், 5,300 சதுரடியில், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டம், 2022- -23 ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 2.06 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் 'டிஜிட்டல்' நுாலக கட்டடம் கட்டுவதற்கு கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டது. பின் கட்டுமான பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது கட்டடம், 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இன்னும் இரு மாதத்தில் பணிகள் முழுமையாக முடிந்து டிஜிட்டல் நுாலரகம் வாசகர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். இந்த நுாலகம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்டது. இரு தளங்களும் குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இங்கு இணையதள வசதியும் உள்ளதால், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள், உயர்கல்வி கற்கும் மாணவர்கள் கணினி மூலம் பாடங்களை கற்கும் வசதியும் உள்ளன.போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள் மற்றும் வினாக்கள், விடை உள்ளதால் மாணவர்கள் அரசு வேலை பெறுவதற்கு பெரிதும்உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை