திருத்தணி : பூனிமாங்காடு, அத்திமாஞ்சேரிப்பேட்டை, கொளத்துார், மேலப்பூடி, மாமண்டூர், வி.புதுார் மற்றும் பாலாபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சப்ளை நிறுத்தப்படுகிறது. பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துார், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லுார், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்துார், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொராக்காய்பேட்டை.காக்களூர், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.