உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேண்பாக்கம் வைத்தியநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்

வேண்பாக்கம் வைத்தியநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவில் சிதிலமடைந்ததை தொடர்ந்து, கிராமவாசிகள் சொந்த செலவில் திருப்பணிகள் மேற்கொண்டனர். கடந்த மாதம் 8ம் தேதி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. நாள்தோறும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.நிறைவு நாளான நேற்று, சிவாச்சாரியார்கள் கலசங்களின் புனித நீரை தலையில் சுமந்து வந்து, அவற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.அதை தொடர்ந்து, 108 சங்காபிஷேகமும், வைத்தியநாத சுவாமி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் உற்சவ பெருமானுக்கு திருக்கல்யாண வைபவமும் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று 'ஓம் நமச்சிவாயா... ஓம் நமச்சிவாயா' என, சிவபெருமானைநெஞ்சுருக வணங்கி வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை