உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமிக்கு திருமணம் ஐந்து பேருக்கு வலை

சிறுமிக்கு திருமணம் ஐந்து பேருக்கு வலை

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்தாண்டு செப்., 6ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் பரந்தாமன் என்பவருடன் கட்டாய திருமணம் நடந்தது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி மொபைல்போன் வாயிலாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, திருவாலங்காடு ஒன்றியம், விரிவாக்க அலுவலர் வசந்தா நேற்று திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்படி, சிறுமி திருமணம் தடை சட்டத்தின் கீழ் பரந்தாமன், அவரது உறவினர்கள் ஜெயராமன், ஜோதி, கன்னியம்மாள் மற்றும் குப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி