உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கற்கள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கற்கள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சியிலிருந்து திருமணிக்குப்பம் வழியாக வடமங்கலம், வயலுார், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை அரசு, தனியார், பள்ளி, தொழிற்சாலை பேருந்து, கனரக, இலகுரக, இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் திருப்பந்தியூர், திருமணிக்குப்பம் பகுதியில் சேதமடைந்த நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து சாலை சேதமடைந்த பகுதியில், ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. இந்த பணிகள் கடந்த ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பகுதிவாசிகள்மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ