உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டியிடம் நுாதன கொள்ளை நகையுடன் தப்பிய மர்ம நபர்கள்

மூதாட்டியிடம் நுாதன கொள்ளை நகையுடன் தப்பிய மர்ம நபர்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோமளா, 62. நேற்று காலை மாதர்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி கோமளாவிடம் பேசினர்.'இந்த பகுதியில், கத்தியுடன் நகை பறிக்கும் கும்பல் சுற்றி வருகின்றனர். நீங்கள் அணிந்திருக்கும் தங்க செயினை கழற்றி பர்சில் மறைத்து வையுங்கள்' என தெரிவித்தனர்.அவர்களின் பேச்சை நம்பி, 4 சவரன் செயினை கோமளா கழற்றியபோது, அதை வாங்கிய மர்ம நபர்கள், பேப்பரில் மடித்து தருவது போல் செயினுக்கு பதிலாக, கற்களை மடித்து அவரிடம் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றனர்.சிறிது நேரம் கழித்து செயின் திருடுபோனது குறித்து அறிந்த கோமளா, பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, 'சிசிடிவி' கேமரா பதிவுகள் வாயிலாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி