உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமான குடிநீர் தொட்டி அகற்றுவதில் அலட்சியம்

சேதமான குடிநீர் தொட்டி அகற்றுவதில் அலட்சியம்

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதிவாசிகளின் பயன்பாட்டிற்காக, ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நான்கு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலும் பயன்பாட்டில் உள்ளது.இதன் நான்கு துாண்களிலும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, தொட்டியின் அடிபாகம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து, சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்வதால் குழந்தைகள் விளையாட்டு தனமாக அந்த பகுதிக்கு செல்லும் போது, விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைஅகற்ற ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை