| ADDED : ஜூலை 23, 2024 09:12 PM
திருத்தணி:ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரி அடுத்த கே.ஜி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் அரிகீர்த்தி, 20. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 21 ஆகிய இருவரும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி---- சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ராகவேந்திரா பேக்கரி கடையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் இவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் பேக்கரி கடைக்கு வந்தனர். பின் வேலை முடித்துக் கொண்டு, மாலையில் வீட்டிற்கு அதே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது காசிநாதபுரம் பழைய டாஸ்மாக் கடை அருகே காசிநாதபுரம் பசுபதி மற்றும் வேலஞ்சேரி சேர்ந்த இரு வாலிபர்கள் என மூன்று பேரும் மதுபோதையில், வாகனத்தை நிறுத்தினர்.பின் அரிகீர்த்தி ‛எதற்காக வாகனத்தை நிறுத்தீனர்கள்' என கேட்டதற்கு, மூவரும் கைகளால் தாக்கியும், உருட்டை கட்டையால் தாக்கினர். இதை தடுக்க வந்த தனுைஷ பைக் சாவியால் தலையில் குத்தி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து மூவரும் தப்பினர்.அவ்வழியாக சென்றவர்கள், காயமடைந்த அரிகீர்த்தி, தனுஷ் ஆகியோரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மூவரை தேடி வருகின்றனர்.