உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் மரக்கன்று நடவு

அரசு பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் மரக்கன்று நடவு

ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களின் தாய் சார்பில் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை மாணவர்கள் பராமரிக்கும் புதிய திட்டம் நேற்று செயல்படுத்தப்பட்டது. மாணவர்களின் தாய் நடவு செய்து, அவர்களின் பெயரிட்டு அந்த மரக்கன்றுகளை மாணவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பார்கள் என்ற உணர்வுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம், செல்லாத்துார், ஆனந்தவல்லிபுரம் உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் நேற்று மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். நவீன தொழில்நுட்பத்துடன் தாய்பாசத்தையும் இணைத்து செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தால், சுற்றுச்சூழல் மேம்படும் என பெற்றோர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ