உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேல்நல்லாத்துாரில் பயணியர் அவதி

மேல்நல்லாத்துாரில் பயணியர் அவதி

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டமேல்நல்லாத்துார் ஊராட்சி.இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் சென்று வந்தனர்.இந்த நிழற்குடை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டதுபின் பணி முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இப்பகுதியில் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் மற்றும் மாணவ -- மாணவியர் வெயில், மழையில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணியர் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக் கைவிடுத்துள்ளனர்.

வி.ஏ.ஓ., அலுவலகம்

திருவள்ளூர் தாலுகாவிற்கு உட்பட்டது புன்னப்பாக்கம் கிராமம். இங்கு, ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலகம் கடந்த, 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, இந்த கட்டடம் பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கிறது. இதனால், கிராம நிர்வாக அலுவலர் இங்கு பணிபுரியமுடியாத நிலை உள்ளது. மேலும், கிராமவாசிகள் வருவாய் துறையில் பெற வேண்டிய சான்றிதழை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பாழடைந்த கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என, மாவட்ட கலெக்டருக்கு, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி