உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் கேட்டு மப்பேடில் மறியல்

குடிநீர் கேட்டு மப்பேடில் மறியல்

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் இல்லாமல் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் நேற்று மாலை 6:00 மணியளவில் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சித்தைய்யா ஜெகதீசன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிவாசிகளிடம் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று உறுதியளித்தையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை