உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சி அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் பள்ளங்கள்

நகராட்சி அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் பள்ளங்கள்

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி. மாநில நெடுஞ்சாலையில் நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. நகராட்சி பின்புறம் திருத்தணி அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ம.பொ.சி.சாலை நகராட்சி அலுவலகம் அருகே தான் வெளியே செல்ல வேண்டும்.இந்நிலையில் பேருந்து புதிய சாலையில் இருந்து ம.பொ.சி.சாலை திரும்பும் பகுதியில் மெகா பள்ளங்களாக மாறியுள்ளன. இதனால் மழைநீர் தேங்கியும், பள்ளங்கள் உள்ளதால் அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். மேலும், அனைத்து வாகனங்களும் இவ்வழியாக வேண்டிய நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் சாலை சீரமைக்காத தால் வாகன ஓட்டிகள் தினமும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, நகராட்சி அலுவலகம் அருகே பழுதடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என திருத்தணி நகர மக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ