உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்

ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்ட வழங்கல் அலுவலகத்தில், நாளை மறுநாள் ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம்.மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் -2013ன் கீழ் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் 'அந்த்யோதயா அன்ன யோஜனா' ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை, வரும் 31க்குள் தொடர்புடைய ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை