உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மில்லட் மகாராணி பட்டம் சூட தயாரா? 28ம் தேதி சென்னையில் சமையல் போட்டி

மில்லட் மகாராணி பட்டம் சூட தயாரா? 28ம் தேதி சென்னையில் சமையல் போட்டி

சென்னை:தானிய உணவு வகைகளை ஊக்கப்படுத்துவதற்கான, 'மில்லட் மகாராணி' சிறுதானிய சமையல் போட்டி, வரும் 28ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.'மில்லட்' எனப்படும் தானிய வகை உணவுகளின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தானிய உணவை சமைப்பதில், பெண்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் திறனை அறிந்து கொள்ள, 'மில்லட் மகாராணி' என்ற பெயரில், பெண்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.இதற்காக, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'ஆசீர்வாத் மில்லட்ஸ்' நிறுவனம் இணைந்து, சிறுதானிய சமையல் போட்டியை, 28ம் தேதி நடத்துகின்றன.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இந்த போட்டி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், 84897 55777 என்ற மொபைல் போன் எண்ணில், 'வாட்ஸாப்' வழியாக, தங்கள் பெயர், விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.போட்டியில் களம் காணும் பெண்கள், தங்கள் வீட்டிலேயே தானிய வகை உணவை சமைத்து, போட்டி நடக்கும் இடத்திற்கு எடுத்து வந்து காட்சிப்படுத்த வேண்டும்.பிரபல சமையல் கலை நிபுணர் 'செப்' தாமு மற்றும் சித்த மருத்துவர் கு.சிவராமன் ஆகியோரது குழுவினர், சிறந்த தானிய உணவை தேர்வு செய்ய உள்ளனர். இதில், ஆசீர்வாத் மில்லட் மாவு வகையில், உணவு சமைத்து வருவோருக்கு, சிறந்த மதிப்பெண் வழங்கப்படும்.முதல் பரிசு பெறுபவருக்கு, 'மில்லட் மகாராணி' என்ற பட்டம் வழங்கப்படுகிறது. முதல் மூன்று இடங்களுக்குள் வருவோருக்கு, 'பிரிஜ், வாஷிங் மிஷின்' ஆகியவற்றில் ஒன்று பரிசாக வழங்கப்படும். மேலும், ரொக்கப் பரிசாக அதிகபட்சம், 50,000 ரூபாய் வழங்கப்படும்.தானிய உணவு வகைகளின் தேவை மற்றும் அதன் பயன்கள் குறித்தும், தற்போதைய உணவு வகைகளில் உடல் நலனை பேணுவது குறித்தும், சித்த மருத்துவர் சிவராமன் சிறப்புரையாற்ற உள்ளார்.இந்த நிகழ்ச்சியில், 'மாம்பலம் அய்யர்ஸ்' என்ற உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் மாதம்பட்டி பாகஷாலா நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளன.

மகளிர் மட்டுமே

கட்டணம் கிடையாதுமுன்பதிவு அவசியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை