மேலும் செய்திகள்
சுகாதார நிலையம் கட்ட இடம் தேர்வு
09-Sep-2024
திருவள்ளுர்:திருவள்ளூரில் தாசில்தார் அலுவலகம் அருகில் இருந்த, ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றப்பட்டது.திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகில், அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த இடத்தில், சைக்கிள் ஸ்டாண்ட், அரசு அலுவலர் ஓய்வூதியர் சங்க அலுவலகம் இருந்தது. இதனை, கடந்த, ஜன., மாதம், வருவாய் துறையினர் அதிரடியாக அகற்றினர். இந்த இடத்தில், நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்காக கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.இருப்பினும், ஓய்வூதியர் சங்க கட்டடம் மட்டும் இதுவரை அகற்றப்படாமல் இருந்தது. இதனால், பள்ளி கட்டடம் முழு இடத்திலும் கட்ட இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, வருவாய் துறையினர், நேற்று அரசு அலுவலர் ஓய்வூதியர் சங்க கட்டடத்தை இடித்து அகற்றினர். விரைவில், இங்கு நகராட்சி பள்ளி கட்டடம் கட்டப்படும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
09-Sep-2024