உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம், பழவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் உள்ளன. பேருந்துகள் நிற்கும் பகுதிகளில் கான்கிரீட் தளங்கள் ஆங்காங்கே சேதம் அடைந்து உள்ளன.மேடும் பள்ளமாக உள்ளதால், பேருந்துகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன. இரவு நேரங்களில் பயணியர் இருக்கை பகுதிகளில் மின்விளக்குகள் சரிவர எரியாமலும், குப்பை அவ்வப்போது அகற்றப்படாமல் இருக்கின்றன.பேருந்து நிலைய வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட கடைகள் வாயிலாக வாடகை, பேருந்துகளுக்கு வரி, கட்டடண கழிப்பறை என பல்வேறு வகைகளில் வருவாய் ஈட்டும் நகராட்சி நிர்வாகம், வளாகத்தை அவ்வப்போது சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.பேருந்து நிலைய வளாகத்தை உரிய முறையில் பராமரிக்கவும், பயணியருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை