| ADDED : ஜூன் 21, 2024 11:58 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்டது கொம்பங்தாங்கல். இங்குள்ள அரசு துவக்கப்பள்ளி கட்டடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது.இதையடுத்து, புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டு வகுப்பு நடந்து வருகிறது.ஆனால், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பழுதடைந்து பயன்பாடில்லாத நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை அகற்ற, பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் இரவு நேரங்களில் குடிமகன்கள் கூடாரமாக மாறி விடுகிறது. பழுதடைந்த கட்டடம் அருகே, நியாய விலைக்கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பகுதிவாசிகள் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தில் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்து அபாய நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை அகற்ற வேண்டுமென, கொம்பந்தாங்கல் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.