உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடையூறு மரக்கிளை அகற்ற கோரிக்கை

இடையூறு மரக்கிளை அகற்ற கோரிக்கை

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருத்தணி திருவள்ளூர் காஞ்சிபுரம் அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றன. இந்த சாலையில், முத்துக்கொண்டாபுரம் பகுதியில், சாலையில் இருந்த ஆலமரம் பாதியளவு வெட்டப்பட்டு கிளைகள் முறிந்து உள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மரக்கிளை மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக இதில் மோதி விழுந்து காயமடையும் நிலை உள்ளது.எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை