மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்
27-Feb-2025
கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தரவல்லி சமேத திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.கோவில் அருகே வாலி தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில், வாலி புனித நீராடி, அங்குள்ள சிவனை வழிபட்டதால், சிவனை திருவாலீஸ்வரர் என்றும், குளத்தை வாலி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.இக்குளம் அசுத்தமாகி, பெரும்பாலான பகுதிகள் துார்ந்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றப்படும் வாலி தீர்த்த குளம் தற்போது பரிதாபமாக காட்சியளிக்கிறது. எனவே, குளத்தை துார்வாரி, புத்துயிர் அளிக்க வேண்டும் என, பக்தர்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
27-Feb-2025