மேலும் செய்திகள்
வரி கட்டாத வணிக வளாகம் குப்பையால் வழிக்கு வந்தது
22-Feb-2025
பொதட்டூர்பேட்டை,:பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பொதட்டூர் பேட்டை, காலனி, சவுட்டூர், வாணி விலாசபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகள். பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகரின் நடுவே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி சோளிங்கர் வேலூர் ஆந்திர மாநிலம் நகரி புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு கல்லூரி படிப்புக்காக செல்லும் மாணவர்களும் தினசரி வேலைக்கு செல்பவர்களும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணி ரயில் நிலையம் வரை தினசரி பேருந்து வாயிலாக பயணித்து வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தில் தற்போது புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த வணிக வளாகத்தால் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சாதாரண நிழற்குடை உள்ளது. இதில் இருக்கை வசதி இல்லை. பேரூராட்சியின் வருவாயை பெருக்கும் விதமாக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் அடிப்படை வசதியையும் கருத்தில் கொண்டு நிழற்குடையையும் நவீன வசதிகளுடன் புதிதாக கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
22-Feb-2025