உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலை ஓரம் மெகா பள்ளம் தடுப்பு அமைக்க கோரிக்கை

நெடுஞ்சாலை ஓரம் மெகா பள்ளம் தடுப்பு அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் கவரைப்பேட்டை முதல் திடீர் நகர் வரையிலான, 10 கி.மீ., சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. சாலை உயரமாக அமைக்கப்பட்டதால், குருவராஜகண்டிகை பஸ் நிலையம் முதல் திடீர் நகர் வரை, சாலையோரம் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.மிகவும் ஆபத்தாக உள்ள அப்பகுதியை கவனத்துடன் கடக்க வேண்டும். சற்று கனக்குறைவாக இருந்தால், சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. அந்த பகுதியில் சாலையோர வெள்ளை கோடும் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து வருகின்றனர்.உடனடியாக அந்த இடத்தில், சாலையோர வெள்ளை கோடு மற்றும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில நெடுஞ்சாலை துறையினர் துரிதமாக செயல்பட்டு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்