உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சமுதாய கூடப்பணி கிடப்பில் மப்பேடு பகுதிவாசிகள் அதிருப்தி

சமுதாய கூடப்பணி கிடப்பில் மப்பேடு பகுதிவாசிகள் அதிருப்தி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில், சமுதாயக்கூடம் இல்லாததால், தனியார் மண்டபங்களை பகுதிவாசிகள் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, எம்.பி., தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு, மற்றும் அரசு, தனியார் நிறுவனம் பங்க ளிப்புடன் 1.60 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.மப்பேடு கால்நடை மருத்துவமனை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ம் ஆண்டு பணி துவங்கியது.பணி துவங்கி நான்காண்டுகளாகியும் மந்தகதியில் நடந்து வந்த கட்டுமான பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.புதர் மண்டி வீணாகி வருவதோடு மது அருந்தும் கூடாரமாகவும் மாறி வருவது பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அதிகாரிகள் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ