உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குப்பை சூழ்ந்த குடிநீர் தொட்டி தொற்று அபாயத்தில் பகுதிவாசிகள்

குப்பை சூழ்ந்த குடிநீர் தொட்டி தொற்று அபாயத்தில் பகுதிவாசிகள்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் அமைந்தள்ளது கணேசபுரம்.இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி மாடுகள் கட்டும் இடமாகவும், குப்பை சூழ்ந்தும் காணப்படுகிறது.இந்த குடிநீர் தொட்டி கடந்த 2012- -13ம் ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.அதன்பின் 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் பரிதாப நிலையில் உள்ளது.குடிநீர் தொட்டி குப்பை சூழ்ந்து காணப்படுவதால், பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமான மின்கம்பம்

ஊத்துக்கோட்டைபேரூராட்சியில், கிராம நிர்வாக அலுவலகம் அருகே மின்கம்பம் உள்ளது. குடியிருப்புகள் மத்தியில் இந்த மின்கம்பம் அமைத்து, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், தற்போது இந்த கம்பத்தில் உள்ள சிமென்ட் காரை பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் தற்போது உள்ளது.மின்வாரியத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிமென்ட் காரை பெயர்ந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ