உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிடப்பில் கடவுப்பாதை சுரங்கப்பாதை பணி ஆபத்தான முறையில் கடக்கும் பகுதிவாசிகள்

கிடப்பில் கடவுப்பாதை சுரங்கப்பாதை பணி ஆபத்தான முறையில் கடக்கும் பகுதிவாசிகள்

கடம்பத்துார்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம். இப்பகுதியில் பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து 14.5 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கடந்த 2015 ல் துவங்கி, 2022ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.மேம்பாலம் திறக்கப்பட்டதால், கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் பகுதிவாசிகள் கடவுப்பாதையை கடந்து செல்ல கடும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5.50 கோடி ரூபாய் மதிப்பில் 300 அடி நீளம் 16 அடி அகல 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்த நிலையில் இரு ஆண்டுகளாகியும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் இப்பகுதிவாசிகள் கடவுப்பாதையை ஆபத்தான முறையில் கடந்து வருவதால் ரயிலில் அடிபட்டு பலியாகி வருகின்றனர்.எனவே, ரயில்வே துறையினர் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கடம்பத்துார் பகுதிவாசிகள் மற்றும் ரயில் பயணியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை