உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.கே.பேட்டையில் போக்குவரத்து நெரிசலால் பகுதிவாசிகள் அவதி

ஆர்.கே.பேட்டையில் போக்குவரத்து நெரிசலால் பகுதிவாசிகள் அவதி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றிய தலைமையிடமான ஆர்.கே.பேட்டையில் இதுவரை பேருந்து நிலையம் கட்டப்படவில்லை.பஜார் பகுதியே பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. பஜார் பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனியார் நிறுவன பணியாளர் பேருந்துகள், தனியார் பள்ளி வாகனங்கள் என தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் நின்று செல்கின்றன. பஜார் பகுதியில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இதனால், பஜாரில் பேருந்துகள் நின்று செல்ல போதுமான இடவசதி இருந்தது. அதன் பின், மழைநீர் கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் கிடக்கின்றன. சாலையோர கடைகள் நடத்தப்பட்டு வருவதால், வாகனங்கள் பயணிக்க முடியாமல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு சாலையில், தார் சைாலயை ஒட்டி நிரந்தரமாக கடைகள் நடத்தப்பட்டு வருவதால், அந்த சாலையில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, புறக்காவல் நிலையம் எதிரே முச்சந்தியில் வாகனங்கள் எந்நேரமும் நெரிசலில் சிக்கி திணறுகின்றன. இதனால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பஜார் மற்றும் பள்ளிப்பட்டு சாலையில் தார்சாலையை ஒட்டி, பாதசாரிகள் நடந்து செல்ல போதுமான இடவசதி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை