| ADDED : ஜூன் 02, 2024 12:22 AM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் மலைக்கோவில். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மேலும், 1,305 படிகள் கொண்டுள்ள இந்த மலைக்கோவிலுக்கு கடந்த மார்ச் மாதம், பக்தர்கள் பங்களிப்புடன் 'ரோப்கார்' வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த சேவை வாயிலாக, தினசரி 1,000 பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மலைக்கோவிலுக்கு படியேறி நடந்து வரமுடியாத பக்தர்களுக்கு, இந்த சேவை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்நிலையில், மாதாந்திர ரோப்கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த பணிகள் காரணமாக, ஜூன் 5 மற்றும் 6ம் தேதி என இரண்டு நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சோளிங்கர் மலைக்கோவிலுக்கு வர திட்டமிட்டுள்ள பக்தர்கள், கோவிலின் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, தங்களின் பயணத்தை திட்டமிட்டு கொள்ளவும்.மேற்கண்ட இரண்டு நாட்களிலும் வழக்கம்போல் படி வழியாக சென்று, சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.