உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரோப்கார் பராமரிப்பு பணி மூன்று நாட்கள் சேவை ரத்து

ரோப்கார் பராமரிப்பு பணி மூன்று நாட்கள் சேவை ரத்து

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. மலைக்கோவிலுக்கு மார்ச் 8ம் தேதி ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. தினசரி, 1,000 பக்தர்கள், ரோப்கார் வாயிலாக மலைக்கோவிலுக்கு பயணித்து வருகின்றனர்.இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, ரோப்கார் சேவை செயல்படாது. மே 5ம் தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் இயங்கும். இந்த தகவலை யோக நரசிம்ம சுவாமி கோவில் நிர்வாகம் அறிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி