உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீரில் கழிவுநீர் கலப்பு பெருமாநல்லுாரில் பாதிப்பு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பெருமாநல்லுாரில் பாதிப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், பெருமாநல்லுாரில், குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பெருமாநல்லுார் காலனியை சேர்ந்த இளமாறன், 17, ஜெயபிரியா, 13, கஸ்துாரி, 24 உள்ளிட்ட ஏழு பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், அருள் உள்ளிட்டோர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து, குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கிராமத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். தற்போது குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை