| ADDED : ஜூன் 21, 2024 11:17 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த, காலியாக உள்ள 11 கடைகளை சுழற்சி முறையில் வாடகை அடிப்படையில் விடப்பட உள்ளது. மகளிர் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர், இந்த கடைகளை நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்கலாம். முழு விவரத்துடன் விண்ணப்பத்தினை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி முகமை, திருவள்ளூர் என்ற முகவரியில் வரும், 28க்குள் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.