உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா விற்றால் கடை உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

குட்கா விற்றால் கடை உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்யும் கடைகளின் அனுமதியை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் முழுதும், பெரும்பாலான இடங்களில், அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் போன்ற போதை பொருள் விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரி அருகில் உள்ள கடைகளில், போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறது.இதையடுத்து, மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலையில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:உணவுப் பொருட்களின் தரம் குறித்து கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த கடைகளை மீண்டும் திறக்க விடாமல் செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிக்கை வழங்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் கலந்த புகையிலை பொருள் பயன்படுத்துவதை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.கூட்டத்தில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் ஜெகதீஷ் சந்திர போஸ், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் மீரா, முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார, காவல்துறையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை