உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் கோளமீன்கள்

பழவேற்காடில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் கோளமீன்கள்

பழவேற்காடு: பழவேற்காடு மீனவப்பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடலில் பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.இவற்றில், அரிய வகைகளில் ஒன்றான கோளமீன்களும் உள்ளன. இவை 'பவ்வர்ஸ்' எனவும் கூறப்படுகிறது.உருளை வடிவில், பலுான் போன்ற தோற்றத்துடன் இருக்கும். இவற்றின் மீது சிறிதும், பெரிதுமாக முட்கள் உள்ளன. பார்ப்பதற்கு அச்சுறுத்தும் தோற்றத்துடன் இருப்பதால், மீனவர்கள் இவற்றை முள்ளம்பன்றி மீன் என்றும் கூறுகின்றனர்.இவை சாதாரண மீன்கள் போல் இருந்து, எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் சமயத்தில் உடலில் இருந்து முட்கள் வெளியே நீட்டி அச்சுறுத்தும் தன்மை கொண்டது. இதன் முட்கள் மிகுந்த நச்சுத்தன்மை கொண்டவை என்பதால், இவை மனித உணவிற்கு பயன்படுத்துவதில்லை.இந்நிலையில் கடந்த சில தினங்களாக, இந்த அரியவகை கோள மீன்கள் பழவேற்காடு கடற்கரை பகுதியில் இறந்து, கரை ஒதுங்கி கிடக்கின்றன. இவை என்ன காரணத்தினால் இறந்து கரை ஒதுங்குகின்றன என தெரியவில்லை.சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மீனவர்கள் வலையில் சிக்கி, இதுபோன்ற அரியவகை மீன்கள் இறப்பதாக கூறப்படுகிறது. மீன்வளத்துறையினர் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்