உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொண்டாபுரம் பள்ளிக்கு ஊர்வலமாக வந்த மாணவர்கள்

கொண்டாபுரம் பள்ளிக்கு ஊர்வலமாக வந்த மாணவர்கள்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் புதிய மாணவர்கள், குறிப்பாக முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொண்டாபுரம் மற்றும் கொண்டாபுரம் சுற்றுப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், 18 பேர், பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதில், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பகுதிவாசிகள் திரளானோர் ஊர்வலமாக மேளதாளம் முழங்க பள்ளிக்கு வந்தனர். அவர்களை வட்டார கல்வி அலுவலர்கள் கிரிஜா மற்றும் வெங்கடேஸ்வரலு ஆகியோர் வரவேற்றனர். மாணவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளுடன் 11 வகையான கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் திருமால், கிருபாகரன், புஷ்பா, வித்யாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை