| ADDED : ஜூலை 11, 2024 01:19 AM
திருத்தணி:திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுலா அலுவலகம் மற்றும் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் ஆகியவை இணைந்து ஒரு நாள் பாரம்பரிய நடைபயணம் நிகழ்ச்சி முருகன் கோவில் மலைப்பாதையில் நேற்று நடந்தது.மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜாராம் தலைமை வகித்தார். கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் சீ.ரமேஷ் வரவேற்றார்.இதில் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ --மாணவியர், 50 பேரும், தேசிய மாணவர் படை மாணவ- - மாணவியர் 15 பேரும் மற்றும் கோவில் ஊழியர்கள், 10 பேர் என மொத்தம், 75 பேர் பாரம்பரிய நடைபயணத்தில் பங்கேற்று, முருகன் கோவில் மலையடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3 கி.மீ., துாரம் நடந்து சென்றனர். மாணவர்கள், நடப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய விளம்பர பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.