மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
4 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த வெங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லைய்யா, 30. திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் ஸ்வீட், பழக்கடை நடத்திவருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த மூவர் அவரிடம் பழ ஜூஸ் பார்சல் வாங்கிவிட்டு பேப்பர் கப் கேட்டனர். அதற்கு ஒரு கப்பிற்கு ஐந்து ரூபாய் வேண்டுமென கடை உரிமையாளர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அவரை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து எல்லைய்யா கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
4 hour(s) ago