உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடன் வாங்கியவரை கடத்தி சென்ற கும்பல்

கடன் வாங்கியவரை கடத்தி சென்ற கும்பல்

மதுரவாயல்:துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன், 30. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால், இரண்டு மாதங்களாக சென்னை மதுரவாயல், மதுரை நாயக்கன் தெருவில் உள்ள உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், 16ம் தேதி மாலை ஹர்ஷவர்த்தனும், மீனாட்சி சுந்தரமும், மேட்டுக்குப்பம் பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் உணவருந்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது, காரில் வந்த கும்பல், ஹர்ஷவர்த்தனை கடத்திச் சென்றனர். இது குறித்து நேற்று முன்தினம் மதுரவாயல் காவல் நிலையத்தில் மீனாட்சி சுந்தரம் புகார் அளித்தார். தன் உறவினர் ஹர்ஷவர்த்தனை, நெல்லையை சேர்ந்த ரகு மற்றும் ஒன்பது பேர் சேர்ந்து, காரில் கடத்தி சென்றதாக புகாரில் தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ