உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிகிச்சைக்கு வந்த மூதாட்டி பலி

சிகிச்சைக்கு வந்த மூதாட்டி பலி

திருவள்ளூர்,:திருத்தணி அடுத்த தெக்களூரைச் சேர்ந்தவர் விஜயா, 50. கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது உறவினர் சிம்மா, 25, என்பவருடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.இதையடுத்து, சிம்மா மருத்துவனையில் உள்ள இருக்கையில் அமர வைத்து விட்டு, அனுமதி சீட்டு வாங்கி விட்டு வந்து பார்த்தபோது விஜயா மயங்கி கிடந்தார். மருத்துவர் வந்து பரிசோதித்ததில், ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. திருவள்ளூர் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !