உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சின்னம்மாபேட்டையில் ஓராண்டாக செயல்படாத புறக்காவல் நிலையம்

சின்னம்மாபேட்டையில் ஓராண்டாக செயல்படாத புறக்காவல் நிலையம்

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், அமைந்துள்ளது சின்னம்மாபேட்டை கிராமம்.இங்கு திருவாலங்காடு ரயில்நிலையம் அமைந்துள்ளதால், 24 மணிநேரமும் மக்கள் புழக்கம் இருந்து வருகிறது. ஒருநாளைக்கு சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து 30,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வர்.டாஸ்மாக் உள்ளதால் குடிமகன்களின் தொல்லை, கஞ்சா வாலிபர்களின் தொடர் அட்டகாசம் உள்ளதால், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை கருதி இப்பகுதியில் புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் புறக்காவல்நிலையம் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:புறக்காவல் நிலையம் திறந்ததும், சாலையில் மதுகுடிப்பது, கஞ்சா விற்பது, குடிமகன்கள், கஞ்சா வாலிபர்களின் அட்டகாசம் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் தலைதுாக்கி உள்ளது. இதனால் மக்கள் அச்சமடைகின்றனர். புறக்காவல் நிலையத்தில் அனைத்து வசதியும் ஏற்படுத்தி காவலர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. உயரதிகாரிகள் புறக்காவல்நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை