உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை மாணவர்களின் பெற்றோர் வேதனை

சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை மாணவர்களின் பெற்றோர் வேதனை

பாண்டூர்:பூண்டி ஒன்றியம் பட்டரைப்பெரும்புதுார் ஊராட்சிக்கு உட்பட்டது, வரதாபுரம் கிராமம். இங்கு, திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் அரசு துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பள்ளி என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.இந்த சுற்றுச்சுவர் பள்ளியை சுற்றி அமைக்காமல், ஒருபக்கம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.மேலும், பள்ளி வளாகத்திற்குள் நாய், பன்றி, கால்நடைகள் உள்ளே சுற்றித் திரிகின்றன. இதனால், சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை. இதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது என, பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி முழுதும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி