உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆகாயத்தாமரை சூழ்ந்த குளம்

ஆகாயத்தாமரை சூழ்ந்த குளம்

சோழவரம்: சோழவரம் ஒன்றியம்,பூதுார் ஊராட்சிக்கு உட்பட்ட மாறம்பேடு கிராமத்தில், அருமந்தை செல்லும் சாலையின் ஓரத்தில், கீரிப்பிள்ளையான்குளம் அமைந்து உள்ளது.இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படும் மழைநீர் கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்கும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.கடந்த, 2017 ல், நுாறுநாள் பணியாளர்களால் குளம் துார்வாரி சீரமைக்கப்பட்டது. அதன்பின், தொடர் பராமரிப்பு இல்லாததால், குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், கரைகளை சுற்றிலும் புதர் மண்டியும் இருக்கிறது.இதனால் குளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தும் அதை, கிராமவாசிகள், விவசாயிகள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேற்கண்ட குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, கரைகளை சீரமைக்கவும், சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்திட வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை