உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செம்பரம்பாக்கம் வரத்து கால்வாய் புதருக்குள் மாயமாகும் அவலம்

செம்பரம்பாக்கம் வரத்து கால்வாய் புதருக்குள் மாயமாகும் அவலம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் அடுத்துள்ளது, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட கிளாய் கிராமம். இப்பகுதியிலுள்ள பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஸ்ரீபெரும்புதுார் ஏரிக்கு செல்கிறது.பின், அங்கிருந்து வெளியேறும் உபரிநீர், ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து பிள்ளைப்பாக்கம், குன்றத்துார் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் அருகே செல்லும் கால்வாய் புதர் சூழ்ந்து கிடப்பதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ