உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலை ஓரம் குப்பை எரிப்பு புகை மூட்டத்தால் அவதி

நெடுஞ்சாலை ஓரம் குப்பை எரிப்பு புகை மூட்டத்தால் அவதி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மற்றும் ஒட்டியுள்ள ஊராட்சிகளில் குப்பை குவித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த போதிய இடவசதியும், துாய்மை பணியாளர்களும் கிடையாது. அதனால், கேட்பாரற்று கிடக்கும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் குவித்து எரித்து வருவதை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகமும், சுற்றியுள்ள ஊராட்சி நிர்வாகமும் வழக்கமாக கொண்டுள்ளனர்.குறிப்பாக, கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினசரி குப்பை குவித்து எரிக்கப்பட்டு வருகிறது. அப்படி எரிக்கப்படும் குப்பையால், சாலை முழுதும் புகை மூட்டம் சூழ்ந்து முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கண் எரிச்சலுடன் அப்பகுதியை சிரமத்துடன் கடந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி முழுதும் எரியூட்டப்படும் புகையில் உள்ள மாசு துகள்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்து பகுதிவாசிகளுக்கு சுவாச பிரச்னை ஏற்பட வழி வகுக்கிறது.இது குறித்து கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில் புகார் அளித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பகுதி மக்கள் புலம்புகின்றனர்.இதுபோன்று குப்பை குவித்து எரிப்பதை தடுக்க, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சி நிர்வாகங்களுக்கு என்று, தனியாக திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி