உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதிய வகுப்பறை திறப்பு திடீர் ஒத்திவைப்பு வெங்கத்துார் பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

புதிய வகுப்பறை திறப்பு திடீர் ஒத்திவைப்பு வெங்கத்துார் பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி வெங்கத்துார் கண்டிகை பகுதியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்கு200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். போதிய வகுப்பறை இல்லாமல் மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 28 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி துவங்கியது.இந்த பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் நேற்று பள்ளி வகுப்பறை கட்டடம் முதல்வர் பங்கேற்கும் காணொலி காட்சி மூலம் திறப்பு விழா நடத்தப்படுவதாக இருந்தது. இதையடுத்து நேற்று பள்ளி விழாக்கோலம் பூண்டது. காலை 10:00 மணிக்கு திருவள்ளூர் எம்.எல்.ஏ., - வி.ஜி.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 10:40 மணி வரை எம்.எல்.ஏ., வராததால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கடம்பத்துார் ஒன்றிய அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பலர் காத்திருந்தனர். இந்நிலையில் கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வரதராஜன், 'தவிர்க்க முடியாத காரணங்களால் வகுப்பறை கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக' தெரிவித்தார். இதனால் புதிய வகுப்பறைக்கு செல்லலாம் என கனவு கண்டிருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதேபோல மணவாளநகர் கே.ஈ.என்.சி. நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் புதிய வகுப்பறை திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ